முன்னாள் பிரதியமைச்சருக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறை
ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு, 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, அவருக்கு 06 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், அந்த நிறுவனத்திற்காக வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்ட போது அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதன் மூலம் "ஊழல்" புரிந்ததாகக் குற்றம் சுமத்தி, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சரண குணவர்தனவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Post a Comment