Header Ads



3 கோடி ரூபா பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு ஓடிய நபர்


ஹொரணையில் உள்ள அரச வங்கி ஏடிஎம் (ATM ) இயந்திரத்தில் வைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட 3 கோடி ரூபாவிற்கும் அதிக பணம் அடங்கிய பணப்பையை நபரொருவர் கொள்ளையடித்து தப்பியோடியுள்ளார். இன்று பிற்பகல் (3) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது



வங்கியின் பாதுகாப்பு மற்றும் பணப் பரிமாற்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


வங்கி ஊழியர் ஒருவர் 2  பணப்பைகளை எடுத்துக்கொண்டு வங்கியின் பின்புறக்கதவு வழியாக உள்ளே சென்றபோது, ​​அங்கு வந்த நபர் ஒருவர் பணப்பைகளை வலுக்கட்டாயமாக பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பணத்தைத் திருடிய நபர் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்றும் தெரியவந்துள்ளது. See less

No comments

Powered by Blogger.