2 வருடத்தில் 1,854.77 மில்லியன் டொலர்கள் கடனாகப் NPP பெற்ற அரசாங்கம்
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 1,854 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகளவான வெளிநாட்டு கடன்களைப் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பொருளாதார விவகார அமைச்சு இதனை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, 2024 ஜனாதிபதித் தேர்தலிலிருந்து இந்த ஆண்டு மே மாதம் 05ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், சர்வதேச நாணய நிதியத்தைத் (IMF) தவிர்த்து, 1,854.77 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாகப் பெறப்பட்டுள்ளது.
இந்தக் கடன்கள் ஜப்பான், கொரியா, சவூதி அரேபியா, நெதர்லாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், இலங்கை இதுவரையில் ஒட்டுமொத்தமாக 102.02 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகப் பெற்றுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் ராஜாங்க அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்

Post a Comment