Header Ads



சிக்கிய 18 சீனர்கள் - 40 அதிநவீன தொலைபேசிகள் பறிமுதல்


கொழும்பில் சட்டவிரோத இணையவழிக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 18 சீன நாட்டினரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட சீன நாட்டினர் அனைவரும் ஓராண்டு கால விசாக்களில் இலங்கைக்கு வந்து தங்கியிருந்ததாகவும், தங்கியிருந்தபடியே இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட 40 அதிநவீன கைபேசிகளை பறிமுதல் செய்துள்ளனர்.


இலங்கையிலிருந்தவாறே அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் பெயர்களில் போலியான ஆவணங்களைத் தயாரித்து, பல்வேறு நபர்களை இலக்காகக் கொண்டு பெரிய நிதி மோசடிகளில்ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.