Header Ads



10 கூடாரங்கள் அமைத்துப் போராடினாலும் CID விசாரணைகள் நிறுத்தப்படாது


போராட்டக்காரர்கள் ஒன்று அல்ல, 10 கூடாரங்கள் அமைத்துப் போராடினாலும் CID  விசாரணைகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்பட மாட்டாது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எவரேனும் நடந்துகொண்டாலோ அல்லது கருத்துக்களை வெளியிட்டாலோ, அது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அதன் பின்னர் நீதிமன்றமே உரிய தீர்மானத்தை எடுக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


போராட்டங்கள் மூலம் மக்களின் மனங்களை வேறு வழிகளில் திசைதிருப்பும் ஒரு கலாசாரம் வளர்ந்து வருவதாகவும், அதன் காரணமாகவே இந்த விசாரணைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.