பழி வாங்கப்பட்ட ஷாணிக்கு, நீதி கிடைத்தது
இலங்கை பொலிஸ் வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்படும் ஷாணி அபேசேகர, நாட்டின் சமீபத்திய வரலாற்றில் இடம்பெற்ற பல சிக்கலான குற்றப் புலனாய்வுகளை வழிநடத்திய திறமையான அதிகாரியாக அறியப்படுகிறார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபேசேகரவை, பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தரம் உயர்த்துமாறு நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான தீர்மானம் இன்று (13) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காலம் முதல் இதுவரையான காலப்பகுதிக்கான நிலுவை ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தையும் செலுத்துமாறும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட ஷாணி அபேசேகர, சுமார் 11 மாதங்களுக்கு அதிக காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

Post a Comment