Header Ads



அரசாங்கத்தில் இருப்பவர்களே பசில் ராஜபக்சவுடன் அதிகம் பேசுவதாக நாமல் தெரிவிப்பு


அரசாங்கத்தில் இருப்பவர்களே தமது சிறிய தந்தையான பெசில் ராஜபக்சவுடன் அதிகம் பேசுவதாக  நாமல் ராஜபக்ச Mp தெரிவித்துள்ளார்.


ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த எவரும் சட்ட நடவடிக்கைகளைத் தவிர்வில்லை. அரசாங்கத்தில் உள்ளவர்கள் எனது சிறிய தந்தையுடன் என்னை விட அடிக்கடி பேசுகிறார்கள். அவர்களின் அறிவுரையின் பேரில்தான் அவர் வெளிநாட்டில் தங்கியிருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது.


மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் மீதான விசாரணைகளுக்கு மட்டும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

No comments

Powered by Blogger.