Header Ads



மக்களிடம் பலகோடி ரூபாய்களை கொள்ளையடித்த அமித் வீரசிங்க பிடிபட்டான்


எல்ல மற்றும் திகன ஆகிய பகுதிகளில் 'கபானா' தங்குமிட விடுதிகளை அமைக்கும் திட்டத்தைச் செயற்படுத்துவதாகக் கூறி, மக்களிடம் பல கோடி ரூபாய் பண மோசடி செய்த 'அபினவ நிவஹல் பெரமுன' அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த கபானா திட்டத்துக்காக 30 இலட்சம் மற்றும் 20 இலட்சம் ரூபாய் பணத்தை முதலீடு செய்த இருவர் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட போதே காவல்துறையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.


இந்தத் திட்டத்துக்காக மக்களிடமிருந்து பெருமளவு பணம் திரட்டப்பட்ட போதிலும், திட்டம் எதுவும் செயற்படுத்தப்படவில்லை. அமித் வீரசிங்க என்பவரால் விளம்பரப்படுத்தப்பட்ட இந்த கபானா திட்டத்துக்காக, மக்கள் பல கோடி ரூபாய்களை முதலீடு செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.