யுத்தம் இல்லாத, அமைதி நிறைந்த ஒரு சுதந்திரமான நாட்டில் முன்னோக்கி பயணிக்க அழைக்கிறேன்
போர் வீரர்கள் தாய்நாட்டை விடுவிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்களின் நோக்கமும் பிரார்த்தனையும் தாய்நாட்டை ஓர் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே என்றும், அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்ற அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (19) பத்தரமுல்லையில் நடைபெற்ற 17 ஆவது தேசிய போர் வீரர்கள் நினைவு தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
இந்நாட்டின் இரண்டு கோடி மக்களின் கண்ணீரைத் துடைத்த அனைவருக்கும் எமது உத்தம மரியாதையையும் கௌரவத்தையும் செலுத்துகிறோம். அதில் எமது போர் வீரர்கள் ஒரு சிறந்த சேவையைச் செய்துள்ளனர். அவர்கள் இல்லாவிட்டால் இந்த இரண்டு கோடி மக்களின் கண்ணீரைத் துடைக்க முடிந்திருக்காது. அந்தப் பணியின் முன்னோடிகள் நீங்கள், உங்களுக்கு மீண்டும் மீண்டும் எமது கௌரவத்தைச் செலுத்துகிறோம். மேலும் யுத்தம் இல்லாத, அமைதி நிறைந்த ஒரு சுதந்திரமான நாட்டில் முன்னோக்கி பயணிக்குமாறு நான் அழைக்கிறேன்.

Post a Comment