Header Ads



போடப்படாத தடையை நீக்க காத்திராது, உள்ளுராட்சி நிறுவன அனுமதிபெற்று உழ்ஹிய்யாஹ் கடமையினை நிறைவேற்றுவோம்..


⭕️ போடப்படாத தடையை நீக்குவதற்காக காத்திராது உள்ளுராட்சி நிறுவனங்களின் அனுமதி பெற்று உழ்ஹிய்யாஹ் கடமையினை நிறைவேற்றுவோம். உழ்ஹிய்யாஹ் கடமையை நிறைவேற்ற நிய்யத் வைத்திருப்பவர்கள் முன்கூட்டியே உள்ளூராட்சி நிறுவனங்களின் அனுமதிகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


⭕️ பிராணிகளை கொள்வனவு செய்து இடத்துக்கு இடம் கொண்டு செல்வதற்கும் ஹஜ் பெருநாள் தினம் 28ஆம் திகதி ஆயின் அன்றும் மறுநாள் ஐயாமுத் தஷ்ரீக் முதலாம் நாளும் மாத்திரமே உழ்ஹிய்யாஹ் கடமையை நிறைவேற்ற முடியும் இன்ஷா அல்லாஹ்.


⭕️ பிரதி அமைச்சர் முனீர் முழப்ஃபரும்  பெரும்பான்மை இன மக்களின் உணர்வுகளை மதித்து  உழ்ஹிய்யாஹ் கடமைகளை நிறைவேற்றுமாறே வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதி அமைச்சரின் மேற்பார்வையின் கீழ்வரும் முஸ்லிம் சமய கலாசார விவகாரத் திணைக்களம் இந்த விடயத்தில் ஒரு வழிகாட்டலை தருவது நல்லது.


⭕️ பெளர்ணமி தினத்திற்கு முந்திய தினங்களில் வர்த்தமானி அறிவிப்பில் தடையொன்று விதிக்கப்படாத நிலையில்  தடையை நீக்க கோருவதற்கான அவசியம் இல்லை என்பதே சட்டத்தின் தர்க்கமாகும்.


ஏற்கனவே நாம் குறிப்பிட்டது போல உழ்ஹிய்யாஹ் பிராணிகளை பாதையோரங்களில் அல்லது பொது இடங்களில் கட்டி வைத்து காட்சிப்படுத்தல், அவற்றை படமெடுத்து சமூக ஊடகங்களில் பகிர்தல், கழிவுகளை பாதையோரங்களில் வீசுதல், பெளர்ணமி தினத்தில் விநியோகித்தல், எடுத்துச் செல்லல் என்பவற்றை தவிர்ந்து கொள்வோம்.


⭕️ அமைச்சரவையில் முஸ்லிம் அபிலாஷைகளை மனக்குறைகளை எடுத்துச் சொல்ல  முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் இல்லாத நிலையில் முஸ்லிம் சமூகம் சார்ந்து எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அரசும் ஜனாதிபதியும் பொறுப்புக் கூற கடமைப்பட்டுள்ளார்கள்  என்பதனால் மேற்படி கடமையினை எதுவித சிரமங்கள், தடைகளுமின்றி சமுகமாக நிறைவேற்றலாம் என நாம் நம்புகிறோம். இன்ஷா அல்லாஹ்.


மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்

No comments

Powered by Blogger.