30 பவுண் தங்க நகைகள் கொள்ளை
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடந்த 3-ஆம் திகதி நீர்கொழும்பில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த வேளையில், இந்த கொள்ளை பட்டப்பகலில் அரங்கேறியுள்ளது. வீட்டின் மூலைமுடுக்குகளை நன்கு அறிந்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த மேசன் பாஸ் (சிவா), இதனைத் திட்டமிட்டு நடத்தியுள்ளார்.
வீட்டார் திரும்பி வந்து பார்த்தபோது, நகைகளும் பணமும் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். முக்கிய சூத்திரதாரியான மேசன் பாஸ் தற்போது தலைமறைவாகியுள்ளதோடு, அவரது மனைவி மற்றும் கூட்டாளிகள் சிலரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள நபர் குறித்தோ அல்லது படத்தில் காட்டப்பட்டுள்ள நகைகள் விற்பனைக்கு வருவது குறித்தோ தகவல் தெரிந்தால், உடனடியாகக் கீழ்வரும் எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும். தகவல் தருபவர்களின் ரகசியம் காக்கப்படுவதுடன், தகுந்த சன்மானமும் வழங்கப்படும்.
தொடர்புகளுக்கு: 0773547789 / 0770629240

Post a Comment