Header Ads



2029 ஆம் ஆண்டிலும் அநுர குமாரவே நாட்டின் ஜனாதிபதி..


எதிர்வரும் 2029 ஆம் ஆண்டிலும் அநுர குமாரவே நாட்டின் ஜனாதிபதி என அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.


தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் நாடு ஓர் இலக்கற்ற வகையில் பயணம் செய்தது எனவும் பிழையான தீர்மானங்களே இதற்கு காரணம். எனினும் தற்போதைய அரசாங்கம் நிலைமைகளை மாற்றி அமைத்துள்ளது.


கடந்த சில தசாப்தங்களாகவே அநுரவை போன்று நாட்டை கட்டி எழுப்பக்கூடிய மற்றும் மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒரு தலைவர் உருவாகவில்லை. எனவே 2029 ஆம் ஆண்டில் மீண்டும் அநுரவே ஜனாதிபதியாக பதவியேற்பார் என அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.