Header Ads



2026 வாக்காளர் இடாப்பில், உங்கள் பெயர்கள் உள்ளதா..?


2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தொடர்பான உரிமைக்கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


வாக்காளர் இடாப்பின் ஆரம்ப வரைவு தற்போது மக்களின் பார்வைக்காக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தமது விபரங்கள் இடாப்பில் உள்ளதா என மாவட்ட தேர்தல் அலுவலகங்கள், கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் சரிபார்க்க முடியும்.


தேர்தல் ஆணைக்குழு இணையத்திலும் வாக்காளர் இடாப்பினைப் பார்வையிடலாம். பெயர்கள் விடுபட்டிருப்பின், தகவல்களில் திருத்தங்கள் இருப்பின், அவற்றை உரிய காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.