பலி கொடுக்கப்பட இருந்த சிறுவன்
காத்தான்குடி மண்முணை பிரதான வீதியில் ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில், 16 வயது சிறுவன் ஒருவரை பலிகொடுத்து புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் தொடர்புடையதாக மொரட்டுவ பிரதேச செயலக பிரதம கணக்காளர் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களை எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் சிறுவனை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் வைக்குமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சிறுவன் பொலன்னறுவைச் சேர்ந்தவர் எனவும் இவர் 3 தலைமுறையாக முதல் ஆண்பிள்ளை எனவும் 3 நட்சத்திரங்கள் ஒன்றாக ஒரே நேரத்தில் பிறந்தவர் எனவும் இவரை பலிகொடுத்து புதையல் தோண்டுவதற்கு அழைத்துவரப்பட்டாகவும் சிறுவன் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

Post a Comment