இலங்கையின் தேயிலை விற்பனை வீழ்ச்சி
இலங்கையின் தேசிய தேயிலை விற்பனை சராசரி விலையானது கடந்த மார்ச் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக (Forbes & Walker) ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
2026 மார்ச் மாதத்தில் ஒரு கிலோகிராம் தேயிலையின் சராசரி விலை 1,144.23 ரூபாவாக (3.63 டொலர்) பதிவாகியுள்ளது. இது பெப்ரவரி மாத விலையான 1,152.11 ரூபாவுடன் ஒப்பிடுகையில் 7.88 ரூபா சரிவாகும்.
இலங்கை தேயிலை ஏற்றுமதியின் முக்கிய பங்கைக் கொண்டுள்ள இந்தத் தேயிலை வகை, மார்ச் மாதத்தில் 13.95 ரூபாவினாலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 55.02 ரூபாவினாலும் வீழ்ச்சியடைந்து அதிக அழுத்தத்தைச் சந்தித்துள்ளது. உலகளாவிய ரீதியில் தேயிலைக்கான கேள்வி குறைவடைந்துள்ளமை மற்றும் விலை நிர்ணய மாற்றங்கள் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Post a Comment