எமது சமூகம் புதிய விடயங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளது.
சமூகத்திற்குத் தேவையான வினைத்திறனான விடயங்களை உள்வாங்குவதற்கான ஊக்கத்தினை அதிகாரிகள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்துள்ளார்.
நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தேசிய QR கொடுப்பனவுகளைப் பிரபலப்படுத்தும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
QR என்று சொன்னாலே மக்களின் நினைவுக்கு வருவது எது?எரிபொருளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கருவி. QR ஊடாக உரம் வழங்கப்படவுள்ளதாகக் கூறியபோது, உரத்தையும் குறைக்கப் போகிறார்கள் என்ற ஒரு கருத்து உருவானது. எமது சமூகம் புதிய விடயங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளது. ஆனால் புதிய விடயங்கள் கவர்ச்சிகரமானதாகவோ அல்லது இலகுவானதாகவோ இல்லாவிட்டால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment