Header Ads



சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்


புத்தாண்டு விடுமுறையில தெதுரு ஓயாவில் நீராட சென்று 3 சிறுவர்கள் உட்பட 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததால், அப்பகுதி ஆள் நடமாற்றமில்லாத நகரமாக மாறியுள்ளது.


உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 9, 13, 18, 39, 70 மற்றும் 72 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


சிங்கள புத்தாண்டைக் கொண்டாடி மகிழச் சென்ற எங்களுக்கு இப்படி ஒன்று நடக்கும் என்று நாங்கள் ஒருபோதும் கற்பனை செய்துகூடப் பார்க்கவில்லை, புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடிக்கொண்டிருந்த எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது? அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? என  என நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் உறவினர் ஒருவர் கண்ணீருடன் கதறி அழுதார்.

No comments

Powered by Blogger.