Header Ads



இந்தியா எடுத்த நடவடிக்கை - நன்றியுடன் நினைவுகூர்ந்த ஜனாதிபதி


2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைவந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார  ஆகியோருக்கு இடையில் இன்று  (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இருதரப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.


இதுவே இலங்கைக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் எனக் குறிப்பிட்ட இந்திய துணை ஜனாதிபதி, இலங்கையில் தனக்கு வழங்கப்பட்ட சிறப்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பல் தொடர்பில் தனது நன்றியினைத் தெரிவித்தார்.


மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்ட வலுசக்தி நெருக்கடியின் போது, இலங்கைக்கு 38,000 மெட்ரிக் தொன் எரிபொருளை அனுப்புவதற்கு இந்தியா எடுத்த நடவடிக்கையையும் ஜனாதிபதி நன்றியுடன் நினைவு கூர்ந்தார்

No comments

Powered by Blogger.