Header Ads



அமெரிக்கா ஒரு நாட்டின் மீது, போர் தொடுப்பது ஏன்..?


மனிதகுல வரலாற்றிலேயே மாபெரும் பணக்காரர் 14-ஆம் நூற்றாண்டில் மாலி பேரரசை ஆட்சி செய்த 'மான்சா மூசா’ எனும் முஸ்லிம் பேரரசர்தான்.


நவீன பொருளாதார வல்லுனர்களின் கணக்கீட்டின்படி இன்றைய சூழலில் அவரது சொத்து மதிப்பு சுமார் 400 பில்லியன் டாலர்கள். (இந்திய மதிப்பில் 33 லட்சம் கோடி ரூபாய்)


உலகப் பணக்காரர்களான எலான் மாஸ்க், ஜெஃப் பெசோஸ், புருனை சுல்தான் ஆகியோரின் மொத்த சொத்துக்களை சேர்த்தால்கூட இவரது சொத்தில் பாதியை எட்டாது.


மாலி தேசத்தில் அன்று பூமிக்கடியில் 50 மீட்டர் ஆழத்திற்கு தங்கம் கொட்டிக் கிடந்தது. அத்துடன் அன்று மதிப்பு மிக்கதாகக் கருதப்பட்ட உப்பும் அவர்களது வருமானத்திற்கு வலு சேர்த்தது.


இவர் அழைப்புப் பணியிலும் கல்வியிலும் சிறந்து விளங்கினார். அத்துடன் இறையச்சம் மிக்கவராகவும் திகழ்ந்தார்.


ஹஜ் செய்ய மக்காவுக்குப் புறப்பட்டபோது, இவரது பயணத்தில் 60,000 பேர் கலந்துகொண்டனர். அவர்களில் 12,000 பேர் தங்கக் கட்டிகளை ஏந்திய பணியாளர்கள். 80 ஒட்டகங்கள் நிறைய 136 கிலோ தங்கத் துகள்கள் கொண்டு செல்லப்பட்டது.


செல்லும் வழியில் எகிப்தில் தங்கினார். அங்குள்ள ஏழைகளுக்கு இவர் வாரி வழங்கிய தங்கத்தால், எகிப்தின் தங்க மதிப்பு சரிந்தது. அந்த சரிவை சரி செய்ய அவர்களுக்கு 12 ஆண்டுகள் தேவைப்பட்டன.


மாலி இன்றும் உலகின் மிகப்பெரிய தங்க, வைர இருப்புகளைக் கொண்ட நாடுதான். ஆனாலும் மாலி மக்கள் உலகின் ஏழ்மையான மக்களாக உள்ளனர்.


காரணம், பிரான்ஸ் அந்த நாட்டை தொடர்ந்து ஆக்கிரமித்ததே ஆகும். பிரெஞ்சு காலனிவாதிகள் அந்த நாட்டை சூறையாடினர். இதனால் வறுமை அவர்களின் தலையெழுத்தாக மாறியது.


சுதந்திரம் வழங்குவதாக பாசாங்கு செய்த பிரான்ஸ், ஒரு கைப்பாவை அரசிடம் அந்த நாட்டை ஒப்படைத்தது. இதனால் மேலும் நுட்பமான வழிகளில் தங்கள் ஆக்கிரமிப்பை பிரான்ஸ் தொடர்ந்தது.


இதற்கிடையே அமெரிக்காவும் ரஷ்யாவும் அந்த முஸ்லிம் தேசத்தின் செல்வத்தில் பிரான்சுடன் போட்டியிடத் தொடங்கின. அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டினர், கொள்ளையடித்தனர்.


இன்று பிரான்ஸ் உலகின் நான்காவது பெரிய தங்க இருப்பை கொண்ட நாடு. அதாவது 2436 டன் தங்கம் அவர்களிடம் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. ஆச்சரியம் என்னவென்றால், பிரான்ஸின் சொந்த மண்ணில் ஒரு தங்கச் சுரங்கம் கூட கிடையாது. 


மறுபுறம்.. மாலி எனும் முஸ்லிம் நாட்டில் 860 தங்கச் சுரங்கங்கள் இருந்த போதிலும் அங்கே தங்க இருப்புகளே இல்லை. மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்கள் ஏழைகளாக உள்ளனர்.


அமெரிக்கா ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதும் நல்லாட்சி தருவதாக கூறுவதும் அந்த நாட்டின் வளத்தை கொள்ளையடிப்பதற்கே தவிர வேறில்லை.


புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி!


 CelebrityNetWorth


✍️ நூஹ் மஹ்ழரி

No comments

Powered by Blogger.