7 பாதாள உலகக் குழுத் தலைவர்கள் இடமாற்றம்
பூஸ்ஸ அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த முக்கிய 7 பாதாள உலகக் குழுத் தலைவர்கள் வெலிசர புதிய சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
இடமாற்றப்பட்டவர்களில் வெலே சுதா, தெமட்டகொட சமிந்த, லொகு பெட்டி, மிதிகம ருவன், பெக்கோ சமன், ஆர்மி சம்பத் மற்றும் மன்னா ரமேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகள் உள்ளடங்குகின்றனர்.
வெலிசர கடற்படை முகாம் வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சிறைச்சாலையானது விசேட பாதுகாப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிறைச்சாலையின் முதலாவது கைதிகள் குழுவாக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment