Header Ads



43 இலட்சம் ரூபாவை வட்ஸப் செயலியூடாக தந்திரமாக அபகரித்த பெண்


திருகோணமலையை சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து 43 இலட்சம் ரூபாவை வட்ஸ் அப் செயலியூடாக தந்திரமாக அபகரித்த பெண் ஒருவரை திருகோணமலை காவல்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று (01) கைது செய்துள்ளனர்.


 பணத்தை இழந்த நபர் விசே குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.


இதன்படி நடந்த விசாரணகளை அடுத்து கொழும்பை சேர்ந்த இரு பெண்கள் இந்த மோசடியில் ஈடுபட்டமை காவல்துறையினரால் கண்டறியப்பட்டது.


அதன்படி குறித்த பெண்கள் இருவரையும் திருகோணமலைக்கு வருமாறு காவல்துறையினர் அழைத்துள்ளனர். அதனை அடுத்து இன்று திருகோணமலை விசேட குற்றத்தடுப்பு பிரிவிற்கு சமூகமளித்த ஒரு பெண் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

No comments

Powered by Blogger.