Header Ads



NPP அரசாங்கம் ஈரானிய கப்பலுக்கு உதவி வழங்காவிட்டாலும், காட்டிக்கொடுக்காமல் இருந்திருக்கலாம் - காதர் மஸ்தான் Mp


அரசாங்கம் ஈரானிய கப்பலுக்கு உதவி வழங்காவிட்டாலும், காட்டிக்கொடுக்காமல் இருந்திருக்கலாம் என  காதர் மஸ்தான் Mp தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்று (5) உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


ஈரானிய கடற்படையினர் உயிரிழந்தமைக்கு காரணமாக எமது அரசாங்கம் இருக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும்.  11 மணித்தியாலங்கள் அவர்கள் உதவி கோரியிருக்கின்றனர். இருப்பினும் அரசாங்கம் அவர்களுக்கு உதவி வழங்கவில்லை.


உதவி வழங்காவிட்டாலும் பரவாயில்லை காட்டிக் கொடுக்காமல் இருந்திருக்கலாம். உண்மையிலே இது ஒரு வேதனைக்குரிய விடயமாகும்.அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் வெறி பிடித்து அலைகின்றன. 


எமது அரசாங்கம் கிட்டத்தட்ட 100 ஈரானிய கடற்படையினர் இறந்ததற்கு காரணமாக கொலைக்குரிய காரணகர்த்தாக்களாக இருக்கின்றது என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது.


11 மணித்தியாலம் 12 மணித்தியாலம் உதவி கேட்கின்றார்கள். இவ்வாறான ஒரு நிலையில் உதவி கேட்டதற்கு உதவி வழங்கவில்லை. ஆனால் இங்கே வெளியில் கூறுகின்றார்கள் உதவி வழங்காவிட்டாலும் பரவாயில்லை காட்டிக் கொடுக்காமல் இருந்திருக்கலாம். உண்மையிலே இது ஒரு வேதனைக்குரிய விடயமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.