Header Ads



அரசாங்கம் உடனடியாக JVP வீடுகளைச் சோதனையிட்டு, சட்டவிரோத எரிபொருளை மீட்க வேண்டும்


ஜேவிபி உறுப்பினர்கள் சட்டவிரோதமாக தங்களுடைய வீடுகளுக்குள் எரிபொருளை பதுக்கி வைத்திருப்பதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். 


கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 


தற்போது காணப்படும் எரிபொருள் வரிசைகளுக்குப் பின்னாலும் ஜே.வி.பி உள்ளிட்ட தரப்பினரின் கைவரிசை உள்ளது.


கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் எரிபொருளைப் பதுக்கி வைத்து போத்தல்களில் 2000 ரூபாவுக்கு விற்றவர்கள் இவர்களே. இவர்களது ஆதரவாளர்களே எரிபொருள் நிலையங்களுக்கு முன்னால் வரிசைகளில் நின்று தேவையற்ற அச்சத்தை மக்கள் மத்தியில் உருவாக்குகின்றனர்.


தற்போது நாட்டில் எரிபொருள் கையிருப்பு தாராளமாக உள்ளது. எனவே அரசாங்கம் உடனடியாக ஜே.வி.பி உறுப்பினர்களின் வீடுகளைச் சோதனையிட வேண்டும். அங்கு சட்டவிரோதமான முறையில் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதை காண முடியும். மக்கள் இத்தகைய அரசியல் சூழ்ச்சிகளில் சிக்கி எரிபொருளைத் தேவையற்ற முறையில் சேமிக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.