அரச ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிப்பது குறித்து ஆலோசனை
சில அரச ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிப்பது குறித்து ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சுமன ஆலோக்க பண்டார தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுமன ஆலோக்க பண்டார மேலும் கூறுகையில், எரிசக்தி நெருக்கடி ஏற்படும் காலங்களில் உலகின் பல நாடுகளும் இத்தகைய வேலைத்திட்டங்களைச் செயல்படுத்துவது வழமையாகும். இலங்கையிலும் கடந்த கோவிட் தொற்றுக் காலத்தில் வீட்டிலிருந்தே பணியாற்றும் முறை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது தொடர்பான தீர்க்கமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை
-791160.jpg)
Post a Comment