Header Ads



சடலத்திற்கு பாலியல் ரீதியாக இழுக்கு - டிக்கோயாவில் அதிர்ச்சி சம்பவம்


டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் (23 வயது) சடலத்திற்கு, அங்கு பணிபுரியும் சிற்றூழியர்கள் மூவரால் பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறி, ​செவ்வாய்க்கிழமை(03) அன்று   வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.


குறித்த பிரேத அறையில் பணியாற்றும் மூன்று சிற்றூழியர்கள் சடலத்திற்குப் பாலியல் ரீதியாக இழுக்கு ஏற்படுத்தியதாகத் தகவல் வெளியானதை அடுத்து, உயிரிழந்த பெண்ணின் உறவினர்களும் பொதுமக்களும் வைத்தியசாலைக்கு முன்பாகத் திரண்டனர்.


சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த வைத்திய அதிகாரி டாக்டர் பஷ்லி,


"குறித்த சடலம் கடந்த 25ஆம் திகதி வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டது. சடலம் வைக்கப்பட்டிருந்த நிலை குறித்து எமக்கு முறைப்பாடுகள் கிடைத்தன. இதனையடுத்து பிரேத அறையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி (CCTV) காட்சிகளைப் பரிசோதித்தோம். அதில் மூன்று சிற்றூழியர்கள் அநாவசியமான முறையில் பிரேத அறைக்குள் சென்று வந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக நாம் உள்வாரியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம்," எனத் தெரிவித்தார்.


சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்று சந்தேக நபர்களையும் உடனடியாகக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பொலிஸாரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

No comments

Powered by Blogger.