சுவிற்சர்லாந்து இலங்கைப் பள்ளிவாசலில் "Water for Gaza"
(எம் அன்ஸிர்)
சுவிற்சர்லாந்தில் வசிக்கும் முஸ்லிம்களிடையே மிகவும் பிரபல்யமான அமைப்பு Swiss Barakah Charity ஆகும்.
சுவிஸ் முஸ்லிம்களிடையே சேகரிக்கப்படும் சகாத், சதகா அன்பளிப்புகளை காசா, லெபனான், இலங்கை மற்றும் ஆபிரிக்கா நாட்டு மக்களிடையே கொண்டு போய் சேர்ப்பதில் இந்த அமைப்புக்கு முக்கிய பங்குண்டு.
துல்லியமான கணக்குககள் மற்றும் வழங்கும் அன்பளிப்புகளுக்கு வரியிலிருத்து ரத்துச்செய்யும் சலுகையைப் பெறுவதற்காக அவர்ளே வருடாந்தம் வரி பற்றுச்சீட்டு ஒன்றையும் வழங்குவார்கள்.
இந்த புனித ரமலானில் Swiss Barakah பெருந்தொகை தண்ணீர் போத்தல்களை "Water for Gaza" சிலீரானில் இயங்கும் மஸ்ஜித்துல் ரவ்ளா (இலங்கைப் பள்ளிவாசலுக்கு) அன்பளிப்பு செய்தனர்.
பள்ளிவாசலுக்கு தறாவிஹ், கியாமுல்லைல் தொழுகைகளுக்காக வரும் முஸ்லிம்களுக்கு "Water for Gaza" என பொறிக்கப்பட்ட தண்ணீர் போத்தல்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு (2025) Swiss Barakah Charity குறித்த பள்ளிவாசலில் காசா உறவுகளுக்கு நிதிசேகரிக்க ஒரு இப்தாரை நடத்தியது. சுவிற்சர்லாந்தில் பல நூறு பள்ளிவாசல்கள் காணப்பட்டாலும் மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசலில் மாத்திரமே காசா முஸ்லிம்களுக்கு நிதி சேகரித்த போது, அதிகூடிய நிதி கிடைத்துள்ளது. அந்த வீடியோவையும் ஜப்னா முஸ்லிம் அப்போது பதிவேற்றியிருந்தது.
காசா முஸ்லிம்களுக்காக இலங்கைப் பள்ளிவாசலில் சேர்ந்த அதிமூடிய நிதிக்காகவே அதாவது நன்றிக் கடனுக்காக "Water for Gaza" இலவச தண்ணீர் போத்தல்களை Swiss Barakah Charity பள்ளிவாசலுக்கு இம்முறை அன்பளிப்புச் செய்துள்ளனர்.
இந்தப் புனித ரமலானில் காசா, லெபனான், சூடான் முஸ்லிம்களையும் ஞாபத்திற் கொள்வோம். அவர்களுக்காக பிரார்த்திப்போம். முடிந்தால் மனிதாபிமான ரீதியில் உதவுவோம். அல்லாஹ் நம் எல்லோரையும் பொருந்திக் கொள்ளட்டும்.

Post a Comment