Header Ads



அனைத்துச் சேவைகளும் மீண்டும்


தேசிய அடையாள அட்டை விநியோகத்திற்கான அனைத்துச் சேவைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. 


இதற்கமைய, இன்று (24) காலை 11 மணி முதல் மீண்டும் அனைத்து சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 


நேற்று (23) ஏற்பட்ட இந்தக் கணினி அமைப்புக் கோளாறு காரணமாக, இன்றைய தினம் நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது. 


இவ்வாறானதொரு பின்னணியில், இன்று காலை முதல் பெருமளவிலான மக்கள் திணைக்கள வளாகத்தில் திரண்டிருந்ததோடு, அங்கு ஒருவித பதற்றமான சூழ்நிலையும் நிலவியது.

No comments

Powered by Blogger.