Header Ads



அமைச்சர்கள் தாமாக முன்ந்து எரிபொருள் ஒதுக்கீட்டை குறைந்துள்ளதாக அரசாங்கம் பெருமிதம்


அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தங்களது எரிபொருள் ஒதுக்கீட்டை மூன்றிலொன்றுக்கும் அதிகமான அளவில் தானாக முன்வந்து குறைத்துக் கொண்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். 


வலுசக்தி நெருக்கடி காரணமாக நாட்டு மக்களுக்கும் பொதுமக்களுக்கும் முன்மாதிரியாக விளங்கும் வகையில் அனைத்து அமைச்சர்களும் பொதுவான உடன்பாட்டிற்கு வந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 


உலகளாவிய வலுசக்தி நெருக்கடி மற்றும் நிலவும் வறட்சியான வானிலைக்கு மத்தியில் நீர் மற்றும் மின்சாரத்தைச் சேமிப்பதற்கு அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் பொறுப்புடன் பங்களிக்க வேண்டுமென அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.