Header Ads



இலங்கை - ஆப்கான் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு


மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளமை மற்றும் தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

இதன்படி, குறித்த தொடரை இந்த ஆண்டின் இறுதிப் காலாண்டில் நடத்துவதற்குத் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு-20 (T20) தொடர் நாளை முதல் சார்ஜாவில் நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.