நாம் எவ்வளவு வலுவாக இருந்தாலும், உலகத்திடமிருந்து எண்ணெயைப் பெற்றுக்கொள்வதில் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்தக் தருணம், எமது நாட்டிற்கு மாத்திரமல்ல, முழு உலகிற்குமே ஒரு கடினமான சூழ்நிலை. இதற்கு முன்னர் இந்த நாடு வங்குரோத்தானதால் எமக்கு எரிசக்தி கிடைக்காமல் போன ஒரு நிலை இருந்தது. இப்போது நாம் எவ்வளவு வலுவாக இருந்தாலும், உலகத்திடமிருந்து எண்ணெயைப் பெற்றுக்கொள்வதில் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே நாம் சிக்கனமாகச் செயல்பட வேண்டும்.
மின்சார நுகர்வைக் குறைத்துக் கொள்ளுங்கள், பயணங்களைக் குறைத்துக்கொண்டு முடிந்தவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள். எம்மாலும் ஒரு பங்களிப்பை வழங்க முடியும். கடந்த மாதம் நாம் 40 லீட்டர் எரிபொருளைப் பயன்படுத்தியிருந்தால், இந்த மாதம் அதனை 30 லீட்டராகக் குறைத்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? அரசாங்கம் QR முறைமையைக் கொண்டுவரத் தேவையில்லை. மக்கள் தாங்களாகவே நுகர்வைக் குறைத்துக் கொண்டால் QR அவசியப்படாது.
நாம் கட்டியெழுப்பிய மக்கள் அரசாங்கம், நாம் கட்டியெழுப்பிய பொருளாதாரம், வரவிருக்கும் பொருளாதாரத்திற்கு இந்த நேரத்தில் எம்மால் வழங்கக்கூடிய பங்களிப்பு என்ன? தற்காலிகமாக எரிசக்தி நுகர்வைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று தெரியாது. நாம் பிரஜைகளாக எமது அன்றாட நுகர்வைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க

Post a Comment