Header Ads



மத்திய கிழக்கில் தனது இராணுவ பலத்தை இழந்து வரும் அமெரிக்கா


இலங்கையிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள், பிரதி சபாநாயகர் உள்ளிட்டோர் ஜனாதிபதியைச் சந்தித்து அழுத்தங்களைக் கொடுத்துள்ளனர். நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர் எட்டப்பட்ட உடன்பாட்டின் படி கப்பலை திருகோணமலைக்குக் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே  இதனை தெரிவித்துள்ளார்.


இந்தியா கடைசி நேரத்தில்  பின்வாங்கியுள்ளனர். மோடி இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமையும் கவனிக்கத்தக்க விடயமாக மாறியுள்ளது.  தமது நாட்டிற்கு அழைக்கப்பட்ட ஈரான் குழுவினர் மீது நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது குறித்து இந்திய உளவுத்துறையான ரோவிற்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. 


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற சம்பவங்களை முன்கூட்டியே கணிக்கும் திறன் கொண்ட இந்தியா, இந்த ஆபத்தை அறிந்திருந்தும் ஈரான் கப்பலை வெளியேற அனுமதித்தது இந்தியாவின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.


மத்திய கிழக்கில் தனது இராணுவ பலத்தை இழந்து வரும் அமெரிக்கா, இஸ்ரேலைத் தவிர்த்து வேறு பாதுகாப்பான தளங்களைத் தேடி வருகிறது. ஈரான் கப்பலைத் தடுப்பதன் மூலம் இலங்கையை ஒரு நேரடி மோதல் களமாக மாற்ற அமெரிக்கா திட்டமிடுகிறதா என்ற அச்சம் தற்போது வலுவடைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்..

No comments

Powered by Blogger.