Header Ads



ஈரான் மீதான தாக்குதல், ஆன்மீகத் தலைவர் படுகொலை - இலங்கை அரசாங்கம் மௌனம்


ஈரான் மீதான தாக்குதல் மற்றும் அந்நாட்டின் ஆன்மீகத் தலைவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மௌனம் காக்கின்றமையை ஏற்றுக்கொள்ள முடியாது. 


ஈரான் மீதான தாக்குதல் மற்றும் அந்நாட்டுத் தலைவரின் படுகொலைக்கு எதிராக அரசாங்கம் ஒரு கண்டனத் தீர்மானத்தைக் கூட நாடாளுமன்றத்தில் முன்வைக்கவில்லை. ஜனாதிபதி இது குறித்து நேரடியாகப் பேசாமல், அமைச்சர்கள் கூற வேண்டிய விடயங்களையே நாடாளுமன்றத்தில் உரையாற்றுகின்றார்.


முன்னைய காலங்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள், தற்போது ஆட்சியில் இருக்கும்போது மௌனமாக இருப்பது அவர்களின் சந்தர்ப்பவாத அரசியலைக்காட்டுகின்றது.


தற்போதைய அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களுக்குப் பணிந்துவிட்டது.ஈரான் விவகாரத்தில் சர்வதேச நாடுகள் பலவும் கண்டனங்களை வெளியிட்டு வரும் நிலையில், இலங்கையின் தற்போதைய மௌனம் அந்நாட்டின் நீண்டகால வெளிநாட்டுக் கொள்கைக்கு முரணானது” 


நாடாளுமன்றத்  இன்று (03) உரையாற்றுகையிலேயே முஜிபுர் ரஹ்மான் Mp  இதனை தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.