Header Ads



ஜனாதிபதி அநுரகுமார பிரிக்ஸ் மாநாட்டிற்கு நேரில் சென்றிருந்தால்..?


ஜனாதிபதி  அநுரகுமார  பிரிக்ஸ் (BRICS) மாநாட்டிற்கு நேரில் சென்றிருந்தால், எரிபொருள் நெருக்கடி தொடர்பில் ரஷ்யாவிடமிருந்து தற்போதைய நிலையை விட சிறந்த மற்றும் விரைவான ஒத்துழைப்பைப் பெற்றிருக்க முடியும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று (28) நடைபெற்ற சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


பிரிக்ஸ் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அதனைத் தவிர்த்துக்கொண்டார். அவர் அங்கு சென்றிருந்தால் ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சரின் வருகைக்காகக் காத்திருக்காமல், அந்தச் சந்தர்ப்பத்திலேயே எரிபொருள் குறித்துப் பேசித் தீர்வைப் பெற்றிருக்கலாம்.


இருப்பினும், காலந்தாழ்த்தியாவது இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.