இலங்கையில் ஈரானிய கப்பலை மூழ்கடித்ததைவிட கைப்பற்றி இருக்கலாம்
இலங்கை கடற்கரைக்கு அப்பால் ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடிப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவு குறித்து தான் கேள்வி எழுப்பியதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பலைக் கைப்பற்றுவதற்குப் பதிலாக அதனை ஏன் அழித்தீர்கள் என்று தான் இராணுவ அதிகாரிகளிடம் கேட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"நாம் ஏன் அவர்களைக் கொன்றோம்? அவர்களைக் கைது செய்து நமது கடற்படையில் சேர்த்திருக்க முடியாதா?" என்று தான் அதிகாரிகளிடம் கேட்டதாக அவர் அங்கு தெரிவித்தார்.
கப்பலைக் கைப்பற்றுவதை விட அதனை மூழ்கடிப்பதே சிறந்தது என்று தனது ஜெனரல் ஒருவர் தன்னிடம் கூறியதாகவும், அவர் அது அதிக வினோதமானது" என விவரித்ததாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பேரணி ஒன்றில் உரையாற்றும் போதே டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்,

Post a Comment