Header Ads



45 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, வாழ்வாதாரத்தை வழங்கும் துறை வீழ்ச்சியடைந்தால்


எரிபொருள் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதால், நாட்டின் பொருளாதாரத்திற்கு 52% பங்களிப்பை வழங்கும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், இந்த விலை உயர்வு உற்பத்திச் சங்கிலி மற்றும் வழங்கல்-தேவை கட்டமைப்பில் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


இதன்படி,சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக 'பராட்டே' சட்டத்தை நீக்குமாறு அவர் அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளார்.


சுமார் 45 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை வழங்கும் இத்துறை வீழ்ச்சியடைந்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு, குடும்பப் பொருளாதாரம் சீர்குலைந்து, உற்பத்தித் திறன் பலவீனமடையும் என அவர் எச்சரித்தார்.

No comments

Powered by Blogger.