பேருந்துகள் மோதல் - 4 பேர் மரணம், 40 பேர் உயிரிழப்பு
அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் மேலும் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில், காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Post a Comment