Header Ads



ரமழான் (28) கேள்வி

A, கொடுக்கல் வாங்கலின் போது அளவையிலும் தராசிலும் மோசடி செய்பவர்களுக்குப் பெரும் கேடு இருப்பதாக அல்குர்ஆனில் ஒரு முழுமையான அத்தியாயம் எச்சரிக்கிறது.  அளக்கும்போது அளவைப் பூர்த்தி செய்யுங்கள், இன்னும் சரியான தராசைக் கொண்டு நிறுங்கள்" என்று வலியுறுத்தும் அந்த அத்தியாயம் (ஸூரா) எது?


B, கடன் வாங்குவதை விட, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இஸ்லாம் அதிக கவனம் செலுத்துகிறது. ஒருவருக்குக் கடன் கொடுத்தவர், அந்தக் கடனுக்காகப் பகரமாக எவ்விதப் பயனையோ அல்லது மேலதிகத் தொகையையோ பெறுவது வட்டியாகும். அதேவேளை, கடனாளியிடம் மென்மையாக நடப்பதையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஒருவர் தான் கொடுத்த கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் கஷ்டப்படும் ஒருவருக்கு, கூடுதல் அவகாசம் வழங்குவது அல்லது அந்தத் தொகையைத் தள்ளுபடி செய்வது குறித்து அல்லாஹ் எத்தகைய நன்மையை வாக்களிக்கிறான்? அதற்கான ஹதீஸ் ஆதாரம் என்ன?



No comments

Powered by Blogger.