ரில்வின் உத்தியோகபூர்வமற்ற ஜனாதிபதியா..?
NPP அரசுக்குள் தனி நபர் ஆதிக்கம் இல்லை, உரிய வகையில் கலந்துரையாடி கூட்டுப் பொறுப்புடனேயே முடிவுகள் எடுக்கப்படுகின்றன என ரில்வின் சில்வா தெரிவித்தார்.
, “நான் உத்தியோகபூர்வமற்ற ஜனாதிபதி அல்ல. நான் ஜே.வி.பியின் செயலாளர் மட்டுமே. நான் எவருக்கும் அழுத்தம் பிரயோகிப்பது கிடையாது. அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பது இல்லை. ஜே.வி.பி. மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பவற்றின் தலைமையகம் பெலவத்தையில் தான் உள்ளது.
ஆட்சி அமைப்பதற்கு முன்னரும் நாம் அங்கிருந்துதான் முடிவுகளை எடுப்போம். தற்போதும் அங்கிருந்து கலந்துரையாடுவோம். அமைச்சரவையில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் உரிய இடத்தில் எடுக்கப்படும்.
எமது கட்சித் தலைமையகத்தில் கருத்தாடல் இடம்பெறும். பல யோசனைகள் வரும், அது பற்றி ஆராயப்பட்டுப் பெரும்பாலானோரின் தேர்வு ஏற்கப்படும். எனவே, பெலவத்தையில் கலந்துரையாடல் இடம்பெறும். ஆனால் பெலவத்தையில் இருந்து கொண்டு ஒருவர் இயக்குகின்றார் எனக் கூறப்படுவது தவறு என்றார்.

Post a Comment