இலங்கையில் இனவாதிகளுக்கு கடுமையான பசி எடுத்துள்ளது.
இலங்கையில் இனவாதிகளுக்கு கடுமையான பசி எடுத்துள்ளது. இனவாதிகள் கடுமையான பசியில் இருக்கின்றார்கள், எனினும் நாம் இனவாதத்திற்கு தீனி போடுவது இல்லை.
நாம் சிங்கள இனவாதிகளுக்கு, தமிழ் இனவாதிகளுக்கு அல்லது முஸ்லிம் இனவாதிகளுக்கு சாப்பாடு போடுவதில்லை. இவர்கள் கடுமையான பசியினால் வாடுகின்றார்கள் இதனால் ஒவ்வொரு இடத்தையும் மோப்பம் பிடித்து மோப்பம் பிடித்து இவர்கள் அலைந்து திரிகின்றார்கள்.
உணவு இல்லாத காரணத்தினால் இவர்கள் பிளாஸ்டிக் போன்றவற்றை கடித்து சாப்பிட முயற்சிக்கின்றார்கள், இதனால் பற்களுக்கே சேதம் ஏற்படும். எங்களிடம் இனவாதத்திற்கு சாப்பாடு இல்லை எனினும் தேசிய ஒற்றுமை குறித்த சாப்பாடு பூரணமாக உள்ளது, அது ஒரு சவாண் நிறையவே உங்களுக்கு வழங்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்
- அமைச்சர் பிமால் ரத்நாயக்க -

Post a Comment