இடையூறு விளைவிக்காமல், சட்டங்களை கடைபிடித்து காதலர் தினத்தை கொண்டாட பொலிஸார் அறிவுரை
நாட்டின் சட்டத்திட்டங்களை கடைபிடித்து காதலர் தினத்தை கொண்டாடுமாறு உதவி காவல்துறை அத்தியட்சகரும் ஊடகப் பேச்சாளருமான எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்காமல், நாட்டின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கடைபிடித்து காதலர் தினத்தை கொண்டாடுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பொது இடங்களில் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலோ அல்லது அநாகரீகமான முறையிலோ நடந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காதலர் தின நிகழ்வுகள் அல்லது விருந்துபசாரங்கள் நடத்தப்படும் போது, சட்டவிரோத செயல்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய காவல்துறை கண்காணிப்பில் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Post a Comment