Header Ads



எவருடைய கைகளாலும் இன்னொருவர் உயிரிழப்பதை நாங்கள் அங்கீகரிக்கவில்லை


இந்த நாட்டில் யாருடைய உயிரையும் நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. எவருடைய கைகளாலும் இன்னொருவர் உயிரிழப்பதை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. அனைவரின் உயிரையும் பாதுகாக்க ஒரு அரசாங்கமாக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். அதற்காகப் பல தீர்மானங்களை எடுத்துள்ளோம். 


சமூகத்தில் பெருமளவான ஆயுதங்கள் புழக்கத்தில் உள்ளன. கடந்த காலத்தில் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில்தான் நாம் செயற்பட்டு வருகிறோம். சில இராணுவ முகாம்களிலிருந்து பாதாள உலகக் குழுக்களுக்கு ஆயுதங்கள் சென்றமை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வரும் சூழலிலேயே இவ்வாறான கொலைகள் இடம்பெறுகின்றன. கொலைக் கலாசாரத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். மீண்டும் எமது கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


இன்று (17) பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே  அமைச்சர் ஆனந்த விஜேபால 

இதனைக் கூறினார்.

No comments

Powered by Blogger.