Header Ads



புதிய அரசாங்கத்தில் சாதனை படைத்த ராஜபக்ச விமான நிலையம்


மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்ட 2013 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதியில், 2025 ஆம் ஆண்டிலேயே அதிகளவான பயணிகள் கையாளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


2025 ஆம் ஆண்டில் மட்டும் மத்தல விமான நிலையம் ஊடாக 140,614 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அத்துடன், அந்த ஆண்டில் 703 சர்வதேச விமானங்கள் வெற்றிகரமாகக் கையாளப்பட்டுள்ளன.


கடந்த மூன்று ஆண்டுகளாக பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான வளர்ச்சியும், புதிய அரசாங்கம் இந்த விமான நிலையத்தின் மீது செலுத்திய விசேட கவனமுமே இந்த வெற்றிக்கான பிரதான காரணங்களாகக் கூறப்படுகின்றன.


கோடிக்கணக்கான பொதுப் பணம் செலவிடப்பட்டு கைவிடப்பட்ட நிலையிலிருந்த மத்தள விமான நிலையம், தற்போது தேசிய பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் ஒரு பயனுள்ள மையமாக மாறியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.