Header Ads



இது எங்களுக்கு மிகவும் அவமானகரமான தோல்வி


T20 உலகக்கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய அணி சந்தித்துள்ள அடுத்தடுத்த தோல்விகள் குறித்து அந்த அணியின் தலைவர் மிட்செல் மார்ஷ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.


"உண்மையைச் சொல்லப்போனால், இது எங்களுக்கு மிகவும் அவமானகரமான தோல்வி. தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் நாங்கள் மிகவும் மோசமாகத் தோல்வியடைந்துள்ளோம். இது எங்களுக்கு உண்மையிலேயே வெட்கக்கேடானது.


தற்போது எங்களால் காத்திருக்க மட்டுமே முடியும். நாளை நடைபெறவுள்ள சிம்பாப்வே அணியின் போட்டியை நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்தப் போட்டியில் சிம்பாப்வே வெற்றி பெற்றால், நாங்கள் உலகக்கிண்ணத் தொடரிலிருந்து வெளியேற்றப்படுவோம். அணியில் உள்ள அனைவரும் ஏமாற்றத்துடன் இருக்கிறோம்." என மிட்சல் மார்ஸ் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.