மக்களின் அந்த எதிர்பார்ப்புகள் தற்பொழுது சூனியமாகியுள்ளது
NPP அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பின்பற்றி வருவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் குமார் குணரத்னம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் 2024 ஆம் ஆண்டில் ரணில் விக்ரமசிங்க நிறுத்திய இடத்திலிருந்து அவரது திட்டத்தை எவ்வித மாற்றங்களும் இன்றி அதே விதமாக தொடர்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
76 ஆண்டுகால பிரபுக்கள் ஆட்சியை நிறைவுக்கு கொண்டு வந்து சாதாரண பொது மக்களின் ஆட்சியை நிறுவ மக்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
எனினும் மக்களின் அந்த எதிர்பார்ப்புகள் தற்பொழுது சூனியமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் கடந்த ஆட்சியாளர்களின் திட்டங்களை எவ்வித மாற்றமும் இன்றி முன்னெடுத்துச் செல்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்படி அனைத்து கட்சிகளும் முதலாளித்துவ கொள்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் முன்னிலை சோசலிச காட்சி அதற்கு மாறுபட்ட கொள்கைகளை அமுல்படுத்த முயற்சிப்பதாக குமார் குணரத்னம் வலியுறுத்தியுள்ளார்.
முன்னிலை சோசலிச கட்சியின் நான்காவது தேசிய மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டி உள்ளார்.

Post a Comment