கோவில் வளாகத்தில் நோன்பு துறக்க வசதி
தற்போது இவர்கள் குடும்பத்துக்கு சொந்தமாக 4 யானைகள் உள்ளன. கோவில் திருவிழாக்களுக்கு யானை வாடகைக்கு விடுவது வழக்கம். யானைகளுக்கு பாகனாக சைனுதீனும் அவரது சகோதரர்களும் செல்வதுண்டு.
இரண்டு தினங்கள் முன்பு திருச்சூர் அருகே ஒரு கோவிலுக்கு கும்பபரணி திருவிழாவுக்கு சைனுதீன் தனது யானையுடன் சென்றிருந்தார்.
மதியம் கோவிலில் அன்னதானம் உணவு சாப்பிட சைனுதீனை கோவில் நிர்வாகிகள் அழைக்க ரமலான் நோன்பு இருப்பதாக கூறினார் சைனுதீன்.
மதிய உணவுக்கு பிறகு கோவிலில் பூஜைகள், யானை அலங்கார வலம், தீபாராதனை உட்பட தொடர்ந்து நடைபெற்றது.
சரியாக மாலை 6.30 மணிக்கு நோன்பு துறக்கும் நேரத்தில் கோவில் நிர்வாகிகள் யானை நிறுத்தியிருந்த இடத்தில் சைனுதீன் நோன்பு துறக்க ஜுஸும் பழவகைகளும் கொண்டு வந்து வழங்கியது மதம் கடந்த மனிதநேயமாக பார்க்கப்படுகிறது.
நோன்பு துறப்பதற்கு தண்ணீர் பாட்டில் வாங்கி வைத்திருந்த சைனுதீன் கேட்காமலேயே கோவில் வளாகத்தில் அவருக்கு நோன்பு துறக்க வசதிகள் செய்து கொடுத்ததை பாராட்டி நிஜமான கேரள ஸ்டோரி என்று ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
Colachel Azheem

Post a Comment