Header Ads



ஜெயிக்கப் போவது யார்...?


15 ஆம் திகதி  நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 போட்டிக்காக சிறப்பு போக்குவரத்து திட்டம் மற்றும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.


ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மாலை 7 மணிக்கு ஆரம்பமாகும் போட்டிக்கான வாயில்கள், பார்வையாளர்களுக்காக பிற்பகல் 3 மணி முதல் திறக்கப்படும் என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


அதன்படி, போட்டியைக் காண வரும் அனைத்து பார்வையாளர்களும் விரைவில் மைதானத்திற்கு வருமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொள்கிறார்.

No comments

Powered by Blogger.