ஆட்டோவுடன் கடத்தப்பட்டவர் படுகொலை - புனித ரமழானில் அதிர்ச்சி சம்பவம்
புத்தளம் - ரத்மல்யாய, 4ம் குறுக்கில் வசித்துவந்த ஆதம் பாவா அப்துல் லதீப் என்பவர் 21.02.2026 அன்று, இரவு 9 மணி முதல் YB 6811 இலக்க சிவப்புநிற முச்சக்கர வண்டியுடன் காணாமல் போயிருந்த நிலையில், புத்தளம் 600 வீட்டு திட்டத்தின் பின்பகுதியில் அவரது ஜனாஸா கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
புனித ரமழான் காலத்தில், இவ்வாறு ஒரு சகோதரர் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்படுவது கண்டனத்திற்குரியது. வேதனை மிகுந்த செயல்.
யா அல்லாஹ் அன்னாருக்கு உயர்தரமான சுவனத்தை வழங்கிவிடு.

Post a Comment