பிறர் கீழே போட்டதைத் திருடி உண்டது இல்லை
மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி ஆட்சியைப் பிடிக்கும் ஆசை தமக்கில்லை என இன்று (20) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மரிக்கார் Mp தெரிவித்துள்ளார்.
நாம் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் நாட்டைச் சீரழித்து, மின்சார விலையை அதிகரித்து , எரிவாயு வரிசைகளை உருவாக்கி, மக்கள் வரிசைகளில் நின்று அவதிப்படும்போது ஆட்சியைப் பிடிக்கும் துரதிர்ஷ்டவசமான ஆசை எங்களுக்கு இல்லை என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
ஏனென்றால் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், நாம் மொட்டுக்கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல. இது ஐக்கிய மக்கள் சக்தி (SJB). எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை, எங்களுக்கு எதிராக வழக்குகள் இல்லை, நாம் திருடவும் இல்லை. உங்களைப் போல பிறர் கீழே போட்டதைத் திருடி உண்டதும் இல்லை, பிச்சை எடுத்ததும் இல்லை. அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார்.

Post a Comment