Header Ads



டில்வின் சில்வா - ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது. 


இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும்


வலுப்படுத்துதல், எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆராய்தல் மற்றும் சமூக நலத்திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. 


இலங்கைக்காக இந்தியா எப்போதும் ஒரு நம்பிக்கையான மற்றும் உண்மையான பங்காளியாகத் திகழும் என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார். 


இந்தச் சந்திப்பு குறித்து 'X' சமூக ஊடகத்தில் பதிவொன்றை இட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜே.வி.பி குழுவினருடன் மிகவும் சுமூகமான மற்றும் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 


இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவுகளை மேலும் வளர்த்தெடுப்பதற்கு இந்தச் சந்திப்பு சிறந்த அடித்தளமாக அமைந்ததாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.