Header Ads



களனி பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் இப்தார் - களை கட்டிய இன ஐக்கியம்


(அஷ்ரப் ஏ சமத்)


களனி பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் 50 வது ஆண்டு இன்று 24 ஆம் தேதி இப்தார் நிகழ்வுகள் களனி பல்கலைக்கழகத்தின் பிரதான கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.


இக் கூட்டம் மண்டபம் முஸ்லிம்களின் கலாச்சாரத்துக்கு ஏற்ப அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏனைய மாணவர்கள் இணைந்து கொண்டு முஸ்லிம் மாணவிகளுடன் படங்கள் எடுத்துக் கொள்வதும் சிங்கள மாணவர்கள் உதவி ஒத்தாசை புரிவதையும் காணக்கூடியதாக இருந்தது.


இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரும் முஸ்லிம் மஜ்லிஸின் அப்போது 1974 யில் ஆரம்பித்து ஸ்தாபகத் தலைவர் இருந்த என்.எம் அமீன் அவர்களை பல்கலைக்கழக பதிவில் அவர் பெயரைக் கண்டுபிடித்து பிரதம அதிதியாக அழைத்திருந்தனர்


உபவேந்தர் உரையாற்றுகையில் இப்பல்கலைக்கழகம் 150 வருடங்கள் கொண்டாடியது. அப்போது 50 வருடங்கள் முன் ஸ்தபிக்கப் படட முஸ்லிம் மஜ்லிஸ் மலரினைக் கண்டேன் அதில் அமீன் அவர்கள் தலைவராக இருந்த உள்ளதையும் தெரிவித்தார்.


இங்கு உரையாற்றிய அமீன்


நான் அன்று வெளியிட்ட முதலாவது முஸ்லிம் மஜ்லிஸின் மலரின் அட்டைப்படம் சொல்லும் கதை, பண்டைய காலத்து சிங்கள மன்னன் ராஜசிங்கன் கொலை செய்வதற்காக போர்த்துக்கேயர்கள் துரத்தி வந்த போது அப்போது அவ்விடத்தில் மறைந்திருந்தார் ஆனால் இவ்விடத்தில் இருந்த ஓர் முஸ்லிம் பெண் விசாரித்தார்கள் இவ்வழியில் மன்னர் வந்தார? அந்த முஸ்லிம் பெண் எந்த பதிலும் கூறாது அமைதியாக இருந்தார் பின்னர் அவர்கள் அந்தப் பெண்ணை கொலை செய்தார்கள்.


பின்னர் தப்பிய மன்னர் ”மரக்கலையே... .என பெயர் வந்ததையும் இன்றும் மையங்கனையில் ஓர் பிரதேசம் தற்பொழுதும் உள்ளதாக சம்பவத்தினை உரையாற்றினார்.


இன்றைய இப்தார் நிகழ்வில் அ பல்கழகத்தின் ஏனைய பீடங்களில் பயிலும் தமிழ். சிங்கள, கிறிஸ்தவ ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். முஸ்லிம் மாணவர்கள் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு பல்வேறு பீடங்களில் பயிலுகின்றனர்.


இந்த பல்கலைக்கழகத்தின் தேசிய ஐக்கியம்,. ஒற்றுமை கட்டியெழுப்புவது.. இங்குள்ள முஸ்லிம் மாணவிகள் நமது கலாச்சாரத்திற்கு ஏற்ற உடை அணிந்து கல்வி பயில்கின்றனர். அத்துடன் அம்மண்டபத்தில் தொழுகையும் இடம் பெற்றது.



No comments

Powered by Blogger.